SuperTopAds

இலங்கையை ரஷ்ய ஜனாதிபதி புட்டினிடம் கொடுக்கவேண்டும் என்கிறார் சரத் பொன்சேகா..!

ஆசிரியர் - Editor I
இலங்கையை ரஷ்ய ஜனாதிபதி புட்டினிடம் கொடுக்கவேண்டும் என்கிறார் சரத் பொன்சேகா..!

உக்ரைன்- ரஷ்யா யுத்தத்தை காரணம் காட்டி இலங்கையில் பொருட்களின் விலைகளை உயர்த்தி மக்களை கஷ்டத்தில் தள்ள முடியாது. அந்த நாடுகளுக்கிடையிலான யுத்தம் இலங்கையை பாதிக்கும் எனவும் நான் நினைக்கவில்லை. 

அப்படியாயின் இலங்கையை ரஷ்ய ஜனாதிபதி புட்டினிடம்தான் பொறுப்பு கொடுக்கவேண்டும். என நாடாளமன்ற உறுப்பினர், பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா கூறியுள்ளார். கொழும்பில் நேற்று ஊடகங்களை சந்தித்து கருத்து கூறும்போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். 

இது தொடர்பில் மேலும் அவர் கூறுகையில், இந்த அரசாங்கத்தின் செயற்திட்டங்கள் தோல்வியடைந்துள்ளன. சுபீட்சத்தை காணமுடியாமல் உள்ளது. நாட்டு மக்கள் இன்று வேதனையில் வாழ்ந்துகொண்டிருக்கின்றார்கள்.

மக்களுக்கு தமது அத்தியாவசிய தேவைகளை நிறைவேற்றி கொள்ள முடியாமல் வரிசைகளில் நின்று காலத்தை செலவழித்துக்கொண்டிருக்கின்றார்கள். இதனால் மக்கள் போராட்டங்களில் ஈடுபடுகின்றார்கள்.பாதைகளில் கோபத்தில் கத்துகிறார்கள்.

இந்த அரசாங்கம் பிரச்சினைகளில் இருந்து விடுபட உக்ரைன் - ரஷ்யா யுத்தத்தை காரணமாக காட்ட முயற்சித்தால் நாம் அதை ஏற்றுக்கொள்ள மாட்டோம் எனவும் இதன்போது தெரிவித்துள்ளார்.