புகைரத சேவைகள் முடங்குமா? 5 நாட்களுக்கு தேவையான எரிபொருள் மட்டுமே உள்ளது, பொதுமுகாமையாளர் தம்மிக்க ஜயசுந்தர..
அடுத்துவரும் 5 நாட்களுக்கு தேவையான எரிபொருள் மட்டுமே உள்ளதாக புகைரத திணைக்கள பொதுமுகாமையாளர் தம்மிக்க ஜயசுந்தர கூறியுள்ளார்.
புகையிரதத் திணைக்களத்தினால் 10 நாட்களுக்கு எரிபொருளை சேமித்து வைக்க முடியும். எனினும் தற்போது அது சுமார் 50 வீதத்தால் குறைக்கப்பட்டுள்ளதாக ஜயசுந்தர தெரிவித்தார்.
புகையிரதத் திணைக்களத்தின் எரிபொருள் கையிருப்பில் குறைக்கப்பட்டுள்ள போதிலும், புகையிரத சேவைக்கு அது தடையாக இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
நாளொன்றுக்கு சுமார் 100,000 லீற்றர் செலவில் ரயில்கள் இயங்குவதாகவும், இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம்
நாளாந்த அடிப்படையில் எரிபொருளைக் கொள்வனவு செய்யும் முறையை செயற்படுத்துவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.