பொலிஸ் ஊடக பிரிவு நாட்டு மக்களிடம் விடுத்துள்ள கோரிக்கை..!
நாட்டில் இணைய வழி குற்றங்களின் எண்ணிக்கை அதிகரித்துவருவதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
அதற்கமைய, தற்போது கணினி குற்ற விசாரணை பிரிவுக்கு நாளாந்தம் 15 முதல் 20 முறைப்பாடுகள் கிடைக்கப்பெறுவதாக
சிரேஷ்ட பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
எனவே, இணையவழி மோசடிகள் தொடர்பில் மக்கள் அவதானத்துடன் செயற்பட வேண்டும் என அவர் அறிவுறுத்தியுள்ளார்.
மேலும், இவ்வாறான குற்றச் செயல்களில் ஈடுபடுவோர் பிடியாணை இன்றி கைது செய்யப்படுவார்கள் என்றும் சிரேஷ்ட பொலிஸ் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டார்.