நிர்ணயிக்கப்பட்ட நேரத்திற்கு மேல் மின்வெட்டு அமுலாகிறதா? முறைப்பாடு வழங்க தொலைபேசி இலக்கங்கள் அறிமுகம்..
நிர்ணயம் செய்யப்பட்ட நேரத்திற்கு மேலதிகமான நேரம் மின்வெட்டு அமுல்ப்படுத்தப்பட்டால் உடனடியாக அது குறித்து முறைப்பாடு தொிவிக்கும்படி பொதுப் பயன்பாடுகள் அணைக்குழு கோரிக்கை விடுத்திருக்கின்றது.
மின்சாரம் துண்டிக்கப்பட்ட பிரதேசம் மற்றும் நேரம் ஆகியவற்றைக் குறிப்பிட்டு முறைப்பாடு செய்ய வேண்டுமென அதன் தலைவர் ஜானக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.பின்வரும் தொலைபேசி இலக்கங்களில்
பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிற்கு உங்கள் முறைப்பாடுகளை சமர்ப்பிக்கலாம்.(+94 11) 2 392 607/8