கணவனை பிரிந்து காதலனுடன் தங்கிய மனைவி..! வீட்டோடு கொழுத்திய கணவன், காதலன் பலி, மனைவி படுகாயம்..
கள்ள காதலனுடன் மனைவி உறங்கிக் கொண்டிருப்பதை கண்ட கணவன் வீட்டோடு தீ வைத்துக் கொழுத்தியதில் கள்ள காதலன் உயிரிழந்துள்ளதுடன், மனைவி படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
குறித்த சம்பவம் பாணமுரே பிரதேசத்தில் பதிவாகியுள்ளது. சம்பவத்தில் படுகாயமடைந்த கள்ள கணவர் என கூறப்படும் நபர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அவரது மனைவி தீக்காயங்களுடன் பலாங்கொடை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
எம்பிலிப்பிட்டிய, பாணமுரே பகுதியைச் சேர்ந்த 36 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 38 வயதான நான்கு பிள்ளைகளின் தாயாரான இவர், பின்னவல பகுதியில் தனது கணவரை பிரிந்து வாழ்ந்து வந்துள்ளார்.
நேற்று (19) காலை வீட்டுக்கு வந்த கணவரே இவ்வாறு தூ வைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.