மனைவியை கத்தியால் குத்தியதுடன், துப்பாக்கியுடன் வீடு புகுந்து மகனை கடத்தியவர் பொலிஸ் துப்பாக்கி சூட்டில் பலி!
மனைவியை கத்தியால் குத்தியதுடன், கடந்த புதன்கிழமை தனது மாமி வீட்டில் தங்கிருந்த மகனை துப்பாக்கியுடன் புகுந்து கடத்திய நபர் பொலிஸாரின் துப்பாக்கி சூட்டில் கொல்லப்பட்டிருக்கின்றார்.
பெலப்பிட்டியவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. அவரதுஉடல் ஹொரனவில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பொலிஸாரின் துப்பாக்கி பிரயோகத்தில் சிக்கி அவர் உயிரிழந்தார் என தகவல் வெளியாகியுள்ளது.
சுட்டுக்கொல்லப்பட்ட நபர் போதைப்பொருளிற்கு அடிமையாகியிருந்தார் அவருக்கு எதிராக பல குற்றச்சாட்டுகள் உள்ளன என பொலிஸார் தெரிவித்துள்ளனர். சந்தேகநபர் ஒருவாரகாலத்திற்கு முன்னர் மனைவியை கத்தியால் குத்தி காயப்படுத்தியுள்ளார்.
புதன்கிழமை தனது மனைவியின் தாயாரின் வீட்டிலிருந்து இவர் மகனை . கடத்திச் சென்றார் அதன்போது துப்பாக்கி பிரயோகத்தில் ஈடுபட்டார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதனை தொடர்ந்து பொலிஸாரும் விசேட அதிரடிப்படையினரும் விசாரணைகளை மேற்கொண்டனர். ஹொரன வெலப்பிட்டியவில் இடம்பெற்ற துப்பாக்கிபிரயோகத்தின் இடைநடுவில் சிக்கி இவர் உயிரிழந்துள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.