கணவனை சுடுவதற்காக வீட்டுக்குள் நுழைந்தவர்கள் மனைவியை சுட்டுக் கொன்றுவிட்டு தப்பினர்..!
கொழும்பு - களுத்துறை பகுதியில் உள்ள வீடொன்றுக்குள் புகுந்த துப்பாக்கி தாரிகள் வீட்டிலிருந்த பெண் ஒருவரை சுட்டுக் கொன்றுவிட்ட தப்பி சென்றுள்ளது.
மத்துகம, பாலிகா வீதியில் நேற்றிரவு 9 மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. மூன்று பிள்ளைகளின் தாயான தில்ஷானி பெரேரா (40) என்பவரே உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவம் குறித்து மேலும் தெரிய வருகையில், குறித்த பெண் தனது கணவர் மற்றும் பிள்ளைகளுடன் வீட்டில் இருந்த வேளையில்,
உந்துருளியொன்றில் வந்த இருவர் வீட்டு வளவினுள் நுழைந்துள்ளனர். அவர் கணவர் பிள்ளைகளுடன் அறையொன்றுக்குள் சென்று தாழிட்டுக்கொண்ட நிலையில்,
வீடு புகுந்த துப்பாக்கிதாரிகள் அவ்வறையின் கதவை நோக்கி சரமாரியாக துப்பாக்கிப் பிரயோகம் நடத்தியுள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
அத்துடன், குறித்த துப்பாக்கிதாரிகள் வீட்டின் பல இடங்களை நோக்கியும் துப்பாக்கிப் பிரயோகம் நடத்தியுள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
மேலும் உயிரிழந்த பெண்ணின் கணவனை சுடுவதற்காகவே துப்பாக்கிதாரிகள் வந்தபோதும் கணவன் தப்பியுள்ள நிலையில் மனைவி உயிரிழந்துள்ளார்.
இது தொடர்பில் மத்துகம காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.