SuperTopAds

போதை விருந்து நடத்துவோர் மீது கடும் நடவடிக்கை, பொலிஸார் எச்சரிக்கை..! நேற்று ஒரு நாளில் 1505 பேர் கைது..

ஆசிரியர் - Editor I
போதை விருந்து நடத்துவோர் மீது கடும் நடவடிக்கை, பொலிஸார் எச்சரிக்கை..! நேற்று ஒரு நாளில் 1505 பேர் கைது..

சட்டவிரோத போதை விருந்துகளை நடத்துவோர் மீது கடுமையான சட்டநடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸார் எச்சரித்துள்ளனர். 

இது தொடர்பில் அனைத்து பொலிஸ் நிலையங்களின் பொறுப்பதிகாரிகளுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

இதேவேளை, மேல் மாகாணத்தில் குற்றச் செயல்களைத் தடுப்பதற்காக மேற்கொள்ளப்பட்ட விசேட நடவடிக்கையின் மூலம் 

1,505 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்று (13) காலை 08 மணி முதல் மாலை 6 மணி வரை இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.