நாட்டிலுள்ள இரு மின் உற்பத்தி நிலையங்கள் செயலிழப்பு..! பல பகுதிகளில் மின்சாரம் இல்லை..
இன்றைய தினம் பிற்பகல் தொடக்கம் களனி திஸ்ஸ மற்றும் கெரவலப்பிட்டிய மின் உற்பத்தி நிலையங்களில் ஏற்பட்ட தொழிநுட்ப கோளாறு காரணமாக நாட்டின் பல பகுதிகளில் மின்வெட்டு ஏற்பட்டிருக்கின்றது.
தேசிய மின் கட்டமைப்பில் சுமார் 400 மெகாவோட் மின்சாரம் இழப்பு ஏற்பட்டமையே மின் தடைக்குக் காரணம் எனத் தெரிவிக்கப்படுகிறது.