சுகயீனமடைந்து வீதியில் இறந்து கிடந்த பிச்சைக்காரனின் பையில் பல லட்சம் ரூபாய் பணம்! இலங்கையில் நடந்த சம்பவம்..
சுகயீனமடைந்து வீதியில் இறந்து கிடந்த பிச்சைக்காரனிடமிருந்து சுமார் 4 லட்சம் ரூபாய் பணம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.
குறித்த சம்பவம் மாத்தறை - ஹக்மன பகுதியில் இடம்பெற்றுள்ளதாகவும் பொலிஸார் கூறியிருக்கின்றனர்.
உயிரிழந்த பிச்சைக்காரன் கொங்கல பகுதியில் வசிக்கும் 69 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
குறித்த நபர் மலை உச்சியில் உள்ள வீடொன்றில் தனியாக வசித்து வந்ததாகவும், வெளியில் செல்லும் வழியில் கீழே விழுந்து உயிரிழந்திருக்கலாம் எனவும் சந்தேகிக்கப்படுகிறது.
இதையடுத்து குறித்த நபரின் மரணம் தொடர்பான பிரேத பரிசோதனை நடத்தப்பட்டதாகவும், ஆனால் அந்த நபருக்கு உறவினர்கள் இல்லை என்றும்,
அதனால் அவரது சடலம் உரிமை கோரப்படவில்லை என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.
இதையடுத்து உயிரிழந்தவரின் வீட்டை சோதனை செய்த பொலிஸார், அவரது ஆடைகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த
பல பைகளில் இருந்து குறித்த பணத்தொகையை மீட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.