மூட நம்பிக்கையால் கொல்லப்பட்ட 10 வயது சிறுவன்! சுகயீனமடைந்த சிறுவனை வைத்து பிரார்த்தனை, உயிரிழந்த பின் உயிர்பெற வேண்டியும் பிரார்த்தனை..
சுகயீனமடைந்த சிறுவனை வைத்து பிரார்த்தனை செய்து கொண்டிருந்ததால் 10 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் படல்கமுவ - ஆதிமுல்ல பகுதியில் இடம்பெற்றுள்ளது.
தொண்டையில் சளி சிக்கியதால் சுகயீனமடைந்த சிறுவனை வைத்தியசாலையில் அனுமதிக்காமல் வீட்டில் வைத்திருந்த பெற்றோர்
மூட நம்பிக்கையால் சிறுவனை வைத்து பிரார்த்தனை செய்து கொண்டிருந்துள்ளனர். இதனையடுத்து சிறுவன் உயிரிழந்துள்ளான்.
அதன் பின்னரும் சிறுவன் உயிர்பெறவேண்டும். என பெற்றோர் தொடர்ந்து வழிபாடு நடத்திக் கொண்டிருந்துள்ளனர்.
இந்நிலையில் துர்நாற்றம் வீசியதால் பொலிஸாருக்க தகவல் வழங்கப்பட்டதை தொடர்ந்து பொலிஸார் வீட்டை சோதனையிட்டு சடலத்தை மீட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் வீட்டில் இருந்த தாய், தந்தை மற்றும் பாட்டி ஆகியோரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றில் அறிவிக்கப்படவுள்ளதுடன் பிரேத பரிசோதனை ஆரம்பிக்கப்படவுள்ளது.
படல்கமுவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.