யாழ்.மாவட்ட மீனவர்கள் பிரச்சினை உள்ளிட்ட பல முக்கிய விடயங்களுடன் இந்தியா செல்கிறார் வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ்..
இலங்கை வெளிவிவகார அமைச்சர், பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் எதிர்வரும் ஞாயிற்று கிழமை இந்தியாவுக்கான உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளார்.
இதன்போது, டெல்லியில் பல்வேறு உயர்மட்ட சந்திப்புக்களை நடத்த உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி, வடக்கு மீனவர்களின் போராட்டம், எரிபொருள் தட்டுப்பாடு உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் தொடர்பில்
இந்திய உயர்மட்ட தரப்பினருடன் அவர் பேச்சுவார்த்தைகளை மேற்கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.