கொரோனா தொற்றுக்குள்ளான 11 வயது சிறுமி மரணம்..! இலங்கையை மீண்டும் அச்சுறுத்தும் கொரோனா..
கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில் 11 வயதான பாடசாலை சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகின்றது.
புத்தளம் – நாத்தாண்டியவில் உள்ள தேசிய பாடசாலையொன்றின் மாணவி ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுமார் இரண்டு நாட்கள் மாரவில வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் உயிரிழந்துள்ளார்.
கடந்த 28ஆம் திகதி பாடசாலை முடிந்து வீடு திரும்பியபோது குறித்த மாணவிக்கு கடுமையான சுகவீனம் ஏற்பட்டிருந்ததன் காரணமாக
அவர் மாரவில வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இதனையடுத்து குறித்த சிறுமிக்கு மேற்கொள்ளப்பட்ட பீ.சி.ஆர் பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று உறுதியாகி இருந்தமை குறிப்பிடத்தக்கது.
இவ்வாறு உயிரிழந்தவர் தப்போவ பகுதியைச் சேர்ந்த 11 வயதான மாணவியாவார்.