SuperTopAds

இலங்கையில் கொரோனா பரவலுக்கு மத்தியில் சிறுவர்களை தாக்கும் “மிஸ்ஸி”..! மருத்துவர்கள் விடுத்துள்ள எச்சரிக்கை..

ஆசிரியர் - Editor I
இலங்கையில் கொரோனா பரவலுக்கு மத்தியில் சிறுவர்களை தாக்கும் “மிஸ்ஸி”..! மருத்துவர்கள் விடுத்துள்ள எச்சரிக்கை..

நாட்டில் மீண்டும் கொரோனா அபாயம் எழுந்துள்ள நிலையில், அதற்கு மத்தியில் குழந்தைகளை பாதிக்கும் “மிஸ்ஸி” என்ற அபாயகரமான நோய் பரவல் தீவிரமடைந்துள்ளதாக கொழும்பு றிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலை மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். 

“மிஸ்ஸி” என்ற நோய் ஏற்பட்டால் குழந்தைகள் இறக்க கூட நேரிடும் என கொழும்பு ரிட்ஜ்வே வைத்தியசாலையின் குழந்தைகள் நல மருத்துவர் வைத்தியர் தீபால் பெரேரா தெரிவித்தார். இந்த நோய் மிகவும் தீவிரமாக இருக்கலாம் எனவும் இதனால் அனைத்து புலன்களும் செயலிழந்துவிடும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

12 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு தடுப்பூசி போடுவதன் மூலம் இந்த நோயின் அபாயத்தைக் குறைக்கலாம் என அவர் தெரிவித்துள்ளார்.