நாடு முழுவதும் மின்வெட்டு..! எரிசக்தி அமைச்சர் வெளிநாட்டு ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய தகவல்..
நாட்டில் பெப்ரவரி நாடுப்பகுதி அல்லது மார்ச் தொடக்கத்தில் மின்வெட்டு அமுலாகும் என எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
வெளிநாட்டு செய்திச் சேவையொன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
தற்போது அனல் மின் நிலையங்களால் நாட்டின் மொத்த மின் தேவையை பூர்த்தி செய்ய முடியவில்லை.
தரவுகளைப் பார்த்தால், நவம்பர் மாதம் முதல் நாட்டின் மொத்த மின் உற்பத்தியில் 65% நீர்மின்சாரத்தில் இருந்து உற்பத்தி செய்யப்பட்டது.
ஆனால் இப்போது அது 25% ஆகக் குறைந்துள்ளதாகவும் எனவே மார்ச் தொடக்கத்தில் அல்லது பெப்ரவரி நடுப்பகுதியில்
மின்வெட்டு இருக்கும் என்று தான் கணிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.