கடனுக்கு சிகரெட் கொடுக்க மறுத்த வர்த்தகர்! பெண் ஒருவர் உட்பட 3 பேர் மீது வன்முறை கும்பல் தாக்குதல்..

கடனுக்கு சிகரெட் கொடுக்க மறுத்ததால் பெண் ஒருவர் உட்பட 3 பேர் மீது வன்முறை கும்பல் தாக்குதல் நடத்தியுள்ளது.
குறித்த சம்பவலம் எஹலியகொட எல்லாவல பகுதியில் உள்ள கடையொன்றில் இடம்பெற்றிருக்கின்றது.
மேலும் நேற்று (27) இரவு இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது, விற்பனை நிலையத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிரிவி கெமராவில் தாக்குதல் சம்பவம் பதிவாகியுள்ளது.
கடனுக்கு சிகரெட் கேட்ட சம்பவம் தொடர்பில் ஏற்பட்ட வாக்குவாதத்தை அடுத்து குறித்த நபர் கும்பல் ஒன்றுடன் வந்து அவர்களை தாக்கியதாக
விற்பனை நிலைய உரிமையாளர் தெரிவித்துள்ளார்.சம்பவம் தொடர்பில் எஹலியகொட பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.