தரம் 1 மாணவனை பாடசாலையில் சேர்க்க 1 லட்சத்தி 50 ஆயிரம் இலஞ்சம்..! கை நீட்டிய அதிபர் கையும் களவுமாக சிக்கினார்..
தரம் 1 ல் மாணவர் ஒருவரை இணைத்துக் கொள்வதற்கு ஒரு லட்சத்து 50 ஆயிரம் ரூபா பணத்தை லஞ்சமாக வாங்கிய பாடசாலை அதிபர் நேற்று மாலை கையும் களவுமாக கைது செய்யப்பட்டிருக்கின்றார்.
இலஞ்ச ஊழல் தடுப்பு ஆணைக்குழுவினால் அதிபர் கைது செயயப்பட்டிருக்கின்றார். இந்த சம்பவம் கொழும்பு - பாணந்துறை பகுதியில் இடம்பெற்றுள்ளது.
1 ம் தரத்திற்கு மாணவர் ஒருவரை இணைத்துக் கொள்வதற்காக இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக
இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு தெரிவித்துள்ளது. குறித்த நபர் சம்பந்தப்பட்ட மாணவரின் பெற்றோரிடம் இருந்து
ஒரு இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பணத்தை இலஞ்சமாக பெற்றபோது இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக
ஆணைக்குழுவின் அதிகாரிகள் மேலும் தெரிவித்தனர்.