பூஸ்டர் தடுப்பூசி பெறாத எவரும் கச்சதீவுக்குள் நுழைய முடியாது! கண்காணிப்பு தீவிரமாக இருக்கும், யாழ்.மாவட்ட செயலர் திட்டவட்டம்..
பூஸ்டர் தடுப்பூசியை பெற்றுக் கொள்ளாத எவரும் கச்சதீவுக்குள் நுழைய முடியாது. என கூறியிருக்கும் யாழ்.மாவட்டச் செயலர் க.மகேஸன், 500 பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும். எனவும் கூறியிருக்கின்றார்.
குறித்த வடயம் தொடர்பாக மாவட்டச் செயலர் மேலும் தெரிவிக்கையில் நாட்டில் தற்போது அதிகரித்துள்ள கொவிட்19 ஐ கருத்தில் கொண்டு சுகாதார அமைச்சின் அறிவுறுத்தலுக்கமைய கச்சதீவு உற்சவத்தில் பங்குபற்றுவதற்கான
ஒழுங்கு விதிகள் வழங்கப்பட்டிருக்கின்றது. ஆயர்கள் தெரிவுகளின் அடிப்படையில் கச்சதீவு உற்சவத்தில் பங்குபற்ற 500 பக்தர்களுக்கு மட்டும் அனுமதி வழங்கப்படவுள்ளதோடு பங்கு பற்றும் பக்தர்கள்
பூஸ்டர் தடுப்பூசியை கட்டாயம் பெற்றிருக்க வேண்டும். பக்தர்கள் கடல் பயணத்தை மேற்கொள்ளும்போது கடற்படை தெரிவு செய்யும் இறங்கு துறையினை பயன்படுத்திக் கொள்ளவேண்டும்.
அதேபோல இம்முறை இந்தியா பக்தர்களை கச்சதீவு உற்சவத்தில் பங்கு பெற்று தவிர்க்குமாறு சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. ஆகவே எதிர்வரும் நாட்களில் இடம்பெறும் கலந்துரையாடலின் அடிப்படையில்
இறுதி முடிவு எடுக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.