SuperTopAds

வெளிநாட்டிலிருந்து இலங்கை வருவோருக்கான தனிமைப்படுத்தல் ஒழுங்கு விதி திருத்தம்! கடும் நிபந்தனைகளுடன் கூடிய ஒழுங்கு விதி அமுல்..

ஆசிரியர் - Editor I
வெளிநாட்டிலிருந்து இலங்கை வருவோருக்கான தனிமைப்படுத்தல் ஒழுங்கு விதி திருத்தம்! கடும் நிபந்தனைகளுடன் கூடிய ஒழுங்கு விதி அமுல்..

வெளிநாட்டிலிருந்து இலங்கைக்கு வருவோருக்கான திருத்தம் செய்யப்பட்ட புதிய தனிமைப்படுத்தல் ஒழுங்கு விதி நேற்று நள்ளிரவு தொடக்கம் அமுலுக்கு வந்துள்ளது. 

திருத்தங்கள் அடங்கி சுற்றறிக்கை சுகாதார அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ளது. இந்த புதிய வழிகாட்டல்களுக்கமைய, 

கடந்த 6 மாதங்களில் ஒரு தடுப்பூசியை மாத்திரம் பெற்றுக்கொண்டு, கொரோனா தொற்றுக்குள்ளாளன சுற்றுலா பயணிகள், 

இரட்டை பிரஜா உரிமை கொண்டவர்கள் உள்ளிட்ட சகலரும் முழுமையாக தடுப்பூசியை பெற்றுக்கொண்டவர்களாகவே கருதப்படுவார்கள்.

அதேபோன்று வெளிநாடுகளிலிருந்து இலங்கைக்கு வரும்போது விமான நிலையத்தினூடாக முன்னெடுக்கப்படும் பி.சி.ஆர். பரிசோதனைகளின்போது, 

CT மதிப்பு 30 இற்கும் குறைவாகவுள்ள சுற்றுலா பயணிகள் 7 நாட்கள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படுவர்கள்.

அவ்வாறு நாட்டுக்கு வருபவர்களுக்கு வீடுகளிலேயே தனிமைப்படுத்துவதற்கு தேவையான சகல வசதிகளும் இருந்தால் மாத்திரமே அவர் விமான நிலையத்திலிருந்து விடுவிக்கப்படுவார்கள்.

இதற்கு மேலதிகமாக முழுமையாக தடுப்பூசிகளை பெற்றக்கொண்ட பெற்றோருடன் வருகை தரும் 12 வயதுக்கும் குறைவான சிறுவர்கள் 

முழுமையான கொரோனா பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்படுவதுடன், அவர்கள் 12- 18 வயதுக்கு இடைப்பட்டவர்கள் என்றால் 

அவர்களை அவர்களின் பெற்றோருடன் வெளியேற்றுவதற்கான வாய்ப்பு பெற்றுக்கொடுக்கப்படும்.

அதேபோன்று, அதிக கொரோனா ஆபத்துள்ள நாடுகளிலிருந்து வருகைதரும் சுற்றுலா பயணிகளுக்காக முன்னெடுக்கப்படும் தனிமைப்படுத்தல் நடவடிக்கைகள் 

அவர்களின் அறிக்கைக்கமைய தீர்மானம் எடுக்கப்படும் என்று சுகாதார அமைச்சின் இந்த புதிய சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதற்கமைய, ஒருவேளை அவர்களின் தனிமைப்படுத்தல் காலம் 7 தொடக்கம் 14 வரைகியில் மாற்றமடையலாம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.