நாட்டிலுள்ள அழகுக்கலை நிபுணர்களுக்கு லண்டனில் கல்வி தொடர வாய்ப்பு..! கல்வி இராஜாங்க அமைச்சு விடுத்துள்ள அறிவிப்பு..
நாட்டிலுள்ள 500 அழகுக்கலை நிபுணர்கள் லண்டன் பல்கலைகழகத்துடன் இணைந்து கல்வியை தொடர்வதற்கு வாய்ப்பு வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக கல்வி இராஜாங்க அமைச்சர் பியல் நிஷாந்த கூறியிருக்கின்றார்.
அழகுத்தறையுடன் தொடர்புடைய பிரித்தானிய பிரதிநிதிகள் குழுவுடன் மேற்கொண்ட கலந்துரையாடலின் பின்னரே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
சுமார் 100 மில்லியனுக்கும் அதிக பெறுமதிகொண்ட இப்பாடநெறியினை அழகுத்துறையுடன் தொடர்புடைய 4 பிரிவுகளின் கீழ் தொடரலாமெனவும்
சர்வதேச அங்கீகாரம் கொண்ட இப்பாடநெறியில் பிரித்தானிய விரிவுரையாளர்களிடம் சிங்களமொழிபெயர்ப்பு மூலமான விரிவுரைகளையும் பெற்றுக்கொள்ள ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.