தினசரி 2000 ஆயிரம் தொற்றாளர்கள்..! ஊடகங்கள் உண்மையை மறைக்கின்றன, பொதுச்சுகாதார பரிசோதகர்கள் சங்கம் எச்சரிக்கை..
நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளாவோர் எண்ணிக்கையை ஒத்ததாக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுவோர் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளதாக பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தொிவித்திருக்கின்றது.
மேலும் பல வைத்தியசாலைகளில் கொவிட் நோயாளர்களுக்கு வழங்கப்பட்டிருந்த வார்டுகள் தற்போது மற்ற நோயாளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளதால் வைத்தியசாலையின் கொள்ளளவை தாண்டிச் செல்வதாக அந்த சங்கம் குறிப்பிட்டுள்ளது.
பொது பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன மேலும் தெரிவிக்கையில், தற்போது, இலங்கையில் பதிவாகும் கொவிட் நோயாளிகளின் எண்ணிக்கை வியத்தகு அளவில் அதிகரித்துள்ளது.
நாளாந்தம் 2,000 கொவிட் நோயாளிகள் பதிவாகி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. உண்மையான தரவுகள் ஊடகங்களில் வௌியாகவில்லை. வைத்தியசாலைகள் நிரம்பியுள்ளன. ஏற்கனவே இருந்த பல சிகிச்சை மையங்கள் திரும்ப ஒப்படைக்கப்பட்டுள்ளன
மற்றும் சிகிச்சை மையங்கள் இப்போது முழுவதுமாக நிரம்பி வழிகிறது. நோயாளர்கள் இவ்வாறு தொடர்ந்து அதிகரித்தால், பலி எண்ணிக்கையும் அதிகரிக்கக்கூடும்.
எவ்வாறாயினும், தேவைக்கு ஏற்ப வைத்தியசாலைகளின் கொள்ளளவை அதிகரிக்குமாறு வைத்தியசாலை அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் விசேட வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, கொவிட் தொற்றுநோயின் எந்தவொரு புதிய மாறுபாட்டையும் கட்டுப்படுத்தும் ஆற்றல் நாட்டின் சுகாதார பிரிவிற்கு இருப்பதாக சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.