நாட்டில் மீண்டும் தலைதுாக்கும் கொரோனா அபாயம்! கொவிட் தடுப்புக்கான இராஜாங்க அமைச்சர் நாட்டு மக்களுக்கு எச்சரிக்கை..
நாட்டில் கொரோனா அபாயம் மீண்டும் தலைதுாக்குவதாக கொவிட் ஒழிப்புக்கான இராஜாங்க அமைச்சர், வைத்திய கலாநிதி சுதர்ஸினி பெர்னாண்டோபுள்ளே கூறியுள்ளார்.
வைத்தியசாலைகளில் கோவிட் தொற்று உறுதியாளர் எண்ணிக்கை அதிகரித்துச் செல்வதாகத் தெரிவித்துள்ளார்.
கோவிட் பரிசோதனைகளில் நோய்த் தொற்று உறுதியாகும் எண்ணிக்கையிலும் அதிகரிப்பு பதிவாகியுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிலைமைகளை எளிதில் எடுத்துக்கொள்ளக் கூடாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். மக்கள் சுகாதார வழிகாட்டல்களை பின்பற்ற வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, கொழும்பு லேடி ரிட்ஜ்வே வைத்தியசாலையில் 40 சிறார்கள் கோவிட் தொற்றுக்கு இலக்காகியுள்ளதாக
வைத்தியசாலையின் பணிப்பாளர் டொக்டர் ஜீ.வீஜேசூரிய தெரிவித்துள்ளார்.