கர்ப்பவதி பெண்களுக்கு சுகாதாரத்துறை விடுத்திருக்கும் எச்சரிக்கை..!
நாட்டில் கர்ப்பவதி பெண்கள் கொரோனா தொற்றுக்குள்ளாகும் சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக சுகாதார பிரிவினர் எச்சரித்துள்ளனர்.
எனவே, கர்ப்பிணிகள் நெரிசலான இடங்களில் கூடுவதை தவிர்க்க வேண்டும் என சுகாதாரத்துறையினர் வலியுறுத்தி உள்ளனர்.
மகப்பேறு மற்றும் மகளிர் மருத்துவ நிபுணரான பேராசிரியர் சனத் லான்ரோல் இது தொடர்பில் கூறியதாவது,
கடந்த இரண்டு முதல் மூன்று வாரங்களில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட கர்ப்பிணிப் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
எனவே, குறிப்பாக கர்ப்பிணிப் பெண்கள் தங்கள் முந்தைய சுகாதாரப் பழக்கங்களைப் பின்பற்றுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
பொது இடங்களில் மக்கள் கூடும் இடங்களைத் தவிர்க்கவும். விருந்துகள் மற்றும் விடுமுறைக்கு செல்வதை தவிர்த்துவிட்டு வீட்டில் தனியாக இருங்கள்.
இரண்டாவது தடுப்பூசி போட்டு மூன்று மாதங்கள் ஆகிறது என்றால், ஒரு பூஸ்டர் தடுப்பூசியைப் பெற அம்மாக்களைக் கேட்டுக்கொள்கிறோம்
எனத் தெரிவித்துள்ளார்.