கோவில் தீ மிதிப்பு விழாவில் கலந்துகொண்டிருந்த இளம் தாய் ஒருவர் உயிரிழந்துள்ளார்..!
கொழும்பு - ஆமர் வீதியிலுள்ள கோவில் ஒன்றில் இடம்பெற்ற தீ மிதிப்பு விழாவில் கலந்துகொண்ட 26 வயதான ஒரு பிள்ளையின் தாய் தீ காயங்களுக்குள்ளான நிலையில் உயிரிழந்துள்ளார்.
கெசல்வத்தை பகுதியைச் சேர்ந்த 26 வயதான அக்குருவிட்ட ஆராச்சிகே இரேஷா மதுரங்கனி என்பவரே இவ்வாறு உயிரிழந்தார்.
ஆமர் வீதியிலுள்ள குறித்த ஆலயத்தின் வருடாந்த தீக்குளிப்பு நிகழ்வு கடந்த 14ஆம் திகதி இரவு இடம்பெற்றுள்ளது.
குறித்த பெண் தீக்குளிப்பு நிகழ்வில் கலந்து கொண்டபோது கால்களில் தீக்காயம் ஏற்பட்டுள்ளது. தீக்காயங்களுக்கு சிகிச்சை பெறாமல் வீட்டில் இருந்த பெண்,
கவலைக்குரிய நிலையில் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தொடர் சிகிச்சை பெற்று வந்த பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக
பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.