SuperTopAds

தற்செயலாக சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்ட நபர் 3 அரச வங்கி கொள்ளை சம்பவங்களின் சூத்திரதாரி! விசாரணையில் அதிர்ந்த பொலிஸார்..

ஆசிரியர் - Editor I
தற்செயலாக சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்ட நபர் 3 அரச வங்கி கொள்ளை சம்பவங்களின் சூத்திரதாரி! விசாரணையில் அதிர்ந்த பொலிஸார்..

சந்தேகத்திற்கிடமாக நடமாடிய நபரை கைது செய்து விசாரணை செய்தபோது அவர் 3 அரச வங்கிகளில் இடம்பெற்ற பாரிய கொள்ளை சம்பவங்களின் சூத்தரதாரி என அறிந்து பொலிஸார் அதிர்ச்சியடைந்துள்ளனர். 

குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தொியவருவதாவது, சமுர்த்தி, கிராமிய மற்றும் சனச வங்கிகளில் ஒரு கோடியே 73 இலட்சத்திற்கும் அதிக பணம் மற்றும் 9 இலட்சத்திற்கும் அதிக பெறுமதியுடைய தங்க நகைகளைக் 

கொள்ளையிட்ட சம்பவத்துடன் தொடர்புடையவர் என கூறப்படுகின்றது. இரத்மலானை விமான நிலையத்திற்கு அருகில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட நபரிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளில் குறித்த நபர் பத்தேகம, 

பிடிகல, எல்பிட்டிய மற்றும் தெலிகட ஆகிய பொலிஸ் பிரிவுகளில் பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்டுள்ளமை தெரியவந்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

இவ்வாறு கைது செய்யப்பட்ட நபர் 35 வயதுடைய மீவெட்டும – பத்தேகம பிரதேசத்தைச் சேர்ந்தவராவார்.காலி நீதவான் நீதிமன்றத்தில் குறித்த நபருக்கு பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், சந்தேக நபரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டதை தொடர்ந்து எதிர்வரும் 28 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.