தமிழ் அரசியல் கைதிகள் ஐந்து பேர் விடுதலை!
பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, கொழும்பு மகஸின் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த தமிழ் கைதிகள் ஐவர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
சட்டமா அதிபரின் ஆலோசனையின்படி, குறித்த நபர்களை விடுவிக்குமாறு கொழும்பு நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டது.
பளை, கிளிநொச்சி மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த இவர்கள் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் 2019 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டிருந்தனர் .
இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக வழக்கு எதுவும் பதிவு செய்யப்படாமல் சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டிருந்த அரசியல் கைதிகள் ஐவரும், நேற்று மனித உரிமைகள் ஆணைக்குழுவினரிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கின்றனர்.
அவர்களை பொறுப்பேற்ற மனித உரிமைகள் ஆணைக்குழுவினர் அவர்களின் வீடுகளில் ஒப்படைத்திருப்பதாக தெரியவருகிறது.