13 வயது சிறுவனை பயன்படுத்தியே தேவாலயத்திற்குள் குண்டு வைக்கப்பட்டது! பொலிஸ் விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள்..
வெலிக்கடை சிறைச்சாலைக்கு அருகில் உள்ள தேவாலயம் ஒன்றிலிருந்து கை குண்டு மீட்கப்பட்ட சம்பவத்தில் 13 வயதான சிறுவனை பயன்படுத்தியே தேவாலயத்திற்குள் குண்டு வைக்கப்பட்ட அதிர்ச்சி தகவல் விசாரணைகளில் வெளியாகியுள்ளது.
கைது செய்யப்பட்ட 4 சந்தேகநபர்கள் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவில் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அதற்கமைய, கைதான நால்வரில், 56 வயதுடைய மருதானை பகுதியைச் சேர்ந்த ஒருவரிடம்
நீண்ட விசாரணை இடம்பெற்றுள்ளது. இந்த விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. குறித்த சந்தேக நபர் சுமார் 16 வருடங்களாக அந்த தேவாலயத்தில் பணியாற்றி வருவதோடு,
தேவாலயத்திற்குள் கைக்குண்டை வைப்பதற்காக 13 வயது சிறுவனின் உதவியை பெற்றுக்கொண்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. மேலும், கைக்குண்டு தயாரிப்புக்காக பயன்படுத்தப்பட்ட சில பொருட்களையும்
சந்தேகநபர் தங்கியிருந்த அறையிலிருந்து பொலிஸார் கைப்பற்றியுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினர் முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.