தமிழ் - சிங்கள புத்தாண்டை ஒட்டியதாக நாடு முடக்கப்படுமா? கட்டுப்பாடுகள் இறுக்கமாகுமா?
தமிழ் - சிங்கள புத்தாண்டை ஒட்டியதாக நாடு முடக்கப்படுமா? என்பதை தற்போது கூறமுடியாது. என விசேட வைத்திய நிபுணர் வைத்தியர் ஜீட் ஜயமஹ கூறியுள்ளார்.
சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தில் நேற்று (12) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட வைத்திய ஆராய்ச்சி நிறுவனத்தின் வைரஸ் நோய்களுக்கான விசேட வைத்திய நிபுணர் ஜூட் ஜயமஹ இதனை தெரிவித்தார்.
இதன்போது மேலும் அவர் குறிப்பிடுகையில்,
நாளுக்கு நாள், வாரா வாரம், மாதாமாதம், நிலைமைகளை ஆய்வு செய்து, அடுத்தகட்ட முடிவுகளை எடுக்கிறோம்.
நாட்கள், மாதங்கள் வேகமாக நகர்கின்றன. அதனால் அடுத்த வாரம் ஒரு முக்கியத்துவம் வாய்ந்த வாரமாகும். பாடசாலைகள் அனைத்தும் ஆரம்பமாகின்றன. ஏப்ரலில் மீண்டும் ஒரு பண்டிகை காலம் வருகிறது,
எனவே நாம் தற்போதே அது குறித்து கவனம் செலுத்தி சுகாதார பழக்கங்களுடன் செயற்படுத்தல் கட்டாயமாகும்.
பிப்ரவரி 1 ஆம் திகதி நாட்டை மூடுவது குறிது எமக்கு இப்போது கணிக்க முடியாது. வைரஸின் தாக்கம் குறித்து நாங்கள் ஆலோசனை கூறுகிறோம்.
ஆனால் கணிப்பது எங்களுக்கு மிகவும் கடினம். புதிய பிறழ்வு வந்தாலும், முகக்கவசத்தை அணிந்திருந்தால் பரவாது.
இன்னொரு விடயம் என்னவென்றால், நாடு இயல்பு நிலைக்கு வரவில்லை, புதிய பொதுமைப்படுத்தலுக்குதான் நாம் சென்றுள்ளோம்.
நம் நாட்டில் கொவிட் மற்றும் இன்ஃப்ளூயன்ஸா ஒன்றாக தொற்றிய நோயாளர்கள் இதுவரை பதிவாகவில்லை.
அவ்வாறு பதிவானாலும், இது ஒரு பாரிய பிரச்சனை இல்லை. என்றார்.