SuperTopAds

இன்றைய நாள் எப்படி 30/04/2018

ஆசிரியர் - Admin
இன்றைய நாள் எப்படி 30/04/2018

இன்று!

விளம்பி வருடம், சித்திரை மாதம் 17ம் தேதி,ஷாபான் 13ம் தேதி,
30.4.18 திங்கட்கிழமை வளர்பிறை, பவுர்ணமி திதி காலை 6:52 வரை
அதன் பின் பிரதமை திதி, சுவாதி நட்சத்திரம் மதியம் 3:09 வரை
அதன்பின்; விசாகம் நட்சத்திரம், அமிர்த,மரணயோகம்

* நல்ல நேரம் : காலை 6:00-7:30 மணி
* ராகு காலம் : காலை 7:30-9:00 மணி
* எமகண்டம் : காலை 10:30-12:00 மணி
* குளிகை : மதியம் 1:30-3:00 மணி
* சூலம் : கிழக்கு

பரிகாரம் : தயிர்
சந்திராஷ்டமம் : உத்திரட்டாதி,ரேவதி
பொது : யோகநரசிம்மர் வழிபாடு.

மேஷம் : சூழ்நிலை உணர்ந்து செயல்படுவது நல்லது. தொழில், வியாபாரத்தில் அளவான மூலதனம் போதும். லாபம் சுமாராக இருக்கும். பணியாளர்கள் பணிச்சுமைக்கு ஆளாவர். பெண்கள் பணம், நகை பாதுகாக்கும் பொறுப்பை ஏற்க வேண்டாம்.

ரிஷபம்: செயல்களில் உற்சாகம் நிறைந்திருக்கும். தொழிலில் குறுக்கிட்ட இடையூறு விலகும். சேமிக்கும் விதத்தில் லாபம் கிடைக்கும். உபரி வருமானம் கிடைக்கும். பணியாளர்கள் எதிர்பார்த்த சலுகை கிடைக்கும்.

மிதுனம்: மனம் தெளிந்த நீரோடை போல இருக்கும். தொழில் வியாபாரம் வளர்ச்சி பெறும். தாராள பணவரவால் சேமிப்பு அதிகரிக்கும். பெண்கள் விரும்பிய பொருள் வாங்குவர். பிள்ளைகளால் குடும்பத்தில் ஒற்றுமை வளரும்.

கடகம்: பொது இடத்தில் வீண் விவாதம் பேச வேண்டாம். தொழில், வியாபாரத்தில் தடை குறுக்கிட்டாலும் லாபத்திற்கு குறைவிருக்காது. பணியாளர்கள் நிர்வாகத்தின் சட்டதிட்டம் அறிந்து செயல்படுவது நல்லது. பிள்ளைகள் கல்வி, வேலைவாய்ப்பில் முன்னேறுவர்

சிம்மம்: தன்னம்பிக்கையுடன் செயல்படுவீர்கள். தொழில் வியாபாரத்தில் புதிய வாய்ப்பு உருவாகும். லாபம் படிப்படியாக உயரும். பணியாளர்களுக்கு விரும்பிய பணி, இடமாற்றம் வந்து சேரும். வாகனத்தில் மிதவேகம் பின்பற்றவும்.

கன்னி: நியாய தர்மத்துடன் செயல்படுவீர்கள். தாமதமான பணி எளிதில் நிறைவேறும். தொழில், வியாபாரத்தில் கூடுதல் மூலதனம் செய்வீர்கள். லாபம் பன்மடங்கு அதிகரிக்கும். பெண்கள் வீட்டு உபயோகப் பொருள் வாங்குவர்.

துலாம்: சாதுர்யமாக செயல்பட்டு வருவீர்கள். தொழில் வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். குடும்பத்தினரின் விருப்பம் அறிந்து நிறைவேற்றுவீர்கள். உறவினர் இல்ல சுபநிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். நண்பரிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும்.

விருச்சிகம்: நன்றி மறந்தவர்களை விமர்சிக்க வேண்டாம். தொழில், வியாபாரத்தில் திட்டமிட்ட இலக்கு நிறைவேற கூடுதல் முயற்சி தெவை. லாபம் சுமாராக இருக்கும். உடல் நலனில் அக்கறை தேவை. பெண்கள் குடும்ப நலனுக்காக பாடுபடுவர்.

தனுசு: விழிப்புடன் செயல்படுவது நல்லது. தொழில் வியாபாரத்தில் லாபம் சராசரி அளவில் இருக்கும். திடீ்ர் செலவால் சேமிப்பு பணம் கரையும். உடல்நலனுக்காக மருத்துவ சிகிச்சை தேவைப்படும். குடும்பத்தினரின் செயல்பாடு ஆறுதல் அளிக்கும்.

மகரம்: திட்டமிட்ட பணி இடையூறு இல்லாமல் நிறைவேறும். தொழில் வியாபாரத்தில் அபரிமிதமான முன்னேற்றம் ஏற்படும். லாபம் பன்மடங்கு அதிகரிக்கும். புதிய வீடு, வாகனம் வாங்குவீர்கள். பிள்ளைகள் நற்செயலில் ஈடுபட்டு பெருமை சேர்ப்பர்.

கும்பம்: மனக்கஷ்டம் தீர தெய்வ வழிபாடு உதவும். தொழில் வியாபாரத்தில் மிதமான லாபம் கிடைக்கும். பணியாளர்கள் பணிச்சுமையை சமாளிக்க முடியாமல் திணறுவர். பெண்கள் பணம், நகை இரவல் கொடுக்க வேண்டாம். வீடு, வாகன வகையில் திடீர் செலவு உண்டாகும்.

மீனம்: குடும்பத்தினரின் அன்பும் ஆதரவும் கிடைக்கும். தொழில் வியாபாரத்தில் லாபம் திருப்திகரமாக இருக்கும். பணியாளர்கள் விரும்பிய இடமாற்றம் கிடைக்கப் பெறுவர். குடும்பத்துடன் விருந்து, விழாவில் பங்கேற்பீர்கள். அரசியல்வாதிகளுக்கு பதவி பெற அனுகூலம் உண்டு.