ஜனவரி மாதத்தின் இறுதியில் நாடு முழுவதும் மின்வெட்டு அமுலாகும் அபாயம்! கொழும்பு ஊடகங்கள் அதிர்ச்சி தகவல்..
ஜனவரி 3ம் வாரத்தில் நாடு முழுவதும் மின்வெட்டு அமுலாகும் வாத்தியம் உள்ளதாக இலங்கை மின்சாரசபை பேச்சாளர் ஒருவரை மேற்கோள்காட்டி கொழும்பு ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருக்கின்றன.
நாட்டில் தற்போது நிலவும் எரிபொருள் நெருக்கடி மற்றும் வறட்சியான காலநிலை காரணமாக நாட்டின் பல பாகங்களிலும் மின்வெட்டு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் காணப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டின் அன்றாட மின்சாரத் தேவைக்கான மின்சாரத்தை உற்பத்தி செய்வதில் உள்ள சிக்கல்கள் காரணமாக, நெரிசல் நேரங்களில் மின்சாரத்தின் தேவை அதிகரித்தால், எதிர்காலத்தில் இந்த மின்துண்டிப்பு ஏற்படும் எனவும் சுட்டிக்காட்டினார்.
எவ்வாறாயினும், மின் உற்பத்தி நிலையங்களுக்கு எரிபொருளை வழங்குவதன் மூலம் இந்த நிலைமையை தடுக்க முடியும் எனவும், இல்லையெனில் வறட்சியான காலநிலை நீடிக்கும் போது நாடு முழுவதும்
அவ்வப்போது மின்வெட்டு ஏற்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.