SuperTopAds

நாட்டிலுள்ள சகல அரச ஊழியர்களுக்கும் ஜனாதிபதி விடுத்துள்ள அறிவிப்பு! அரச திணைக்களங்களுக்கு நோில் வருவேன் எனவும் கூறினார்..

ஆசிரியர் - Editor I
நாட்டிலுள்ள சகல அரச ஊழியர்களுக்கும் ஜனாதிபதி விடுத்துள்ள அறிவிப்பு! அரச திணைக்களங்களுக்கு நோில் வருவேன் எனவும் கூறினார்..

அடுத்த 3 வருடங்களுக்கு நாட்டிலுள்ள சகல அரச ஊழியர்களும் தங்கள் பூரண ஒத்துழைப்பை வழங்கவேண்டும். என கூறியிருக்கும் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஸ அரச நிறுவனங்களுக்கு நோில் செல்லவுள்ளதாகவும் கூறியுள்ளார். 

தேசிய பாடசாலையாக மாற்றப்பட்டுள்ள மொனராகலை சியம்பலாண்டுவ மகா வித்தியாலயத்தை மாணவர்களிடம் கையளிக்கும் நிகழ்வு நேற்று நடைபெற்றது. இந்நிகழ்விலேயே ஜனாதிபதி மேற்கண்டவாறு கூறியுள்ளார். 

இதன்போது மேலும் அவர் கூறுகையில், 

.நாட்டின் எதிர்கால முன்னேற்றத்துக்காக, அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் ஒன்றிணைந்து, ஒரு குழுவாகச் செயற்பட வேண்டியதன் அவசியத்தையும் ஜனாதிபதி வலியுறுத்தினார்.

ஏற்படும் பின்னடைவுகளை, ஒரு குழுவாக எதிர்கொள்வது கூட்டுப் பொறுப்பாகும். அவ்வாறு செய்யாமல், குறைகளை மட்டும் விமர்சிப்பது சம்பந்தப்பட்டவரின் திறமையின்மையே ஆகுமென்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

கொவிட்-19 தொற்றுப் பரவல் காரணமாக இழந்த இரண்டு வருடங்களைப் பற்றி சிந்திக்காமல், உறுதியளிக்கப்பட்ட பொறுப்புகளை அடுத்த மூன்று வருடங்களுக்குள் நிறைவேற்றுவதற்கு அர்ப்பணிப்புடன் செயற்படவுள்ளதாக, ஜனாதிபதி தெரிவித்தார்.

ஒவ்வொரு நாடாளுமன்ற உறுப்பினரும், அமைச்சரவை நிலையிலுள்ள அமைச்சர் பதவியை எதிர்பார்க்கிறார்கள். எவ்வாறாயினும், அரசியலமைப்பின் மூலம் வழங்கக்கூடிய 30 அமைச்சுப் பதவிகளுக்கு மேலதிகமாக 

எந்தவொரு அமைச்சுப் பதவியையும் வழங்கி மக்களுக்கு வழங்கிய வாக்குறுதியை மீறப் போவதில்லை. மக்களுக்காக எடுக்கப்படும் தீர்மானங்களுக்கு உதவுவது எதிர்க்கட்சி உறுப்பினர்களின் கடமை. 

தீர்மானங்களை எடுக்கும்போது அதிகாரிகள் எவ்வாறு செயற்பட வேண்டும் என்பதை மட்டும் பாருங்கள். அவ்வாறில்லாமல் சுற்றறிக்கைகளின் மூலம் எவ்வாறு வேலைசெய்யாதிருப்பதெனப் பார்க்க வேண்டாம் என்றும்

ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச குறிப்பிட்டார்.எதிர்வரும் மூன்று வருடங்களுக்கு முழு ஆதரவை வழங்குமாறு, அனைத்து அரச ஊழியர்களுக்கும் ஜனாதிபதி அழைப்பு விடுத்தார்.மக்களுக்கான வலுவான அரச சேவையை உருவாக்குவதற்காக, 

எதிர்காலத்தில் அரச நிறுவனங்களுக்கு நேரில் சென்று பார்வையிடவுள்ளதாகவும் தெரிவித்த ஜனாதிபதி, கிராமத்துடன் கலந்துரையாடல் நிகழ்ச்சித்திட்டம் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டு மக்களின் வேணவாக்கள் 

விரைவில் நிறைவேற்றப்படும் எனவும் தெரிவித்தார்.