SuperTopAds

தடுப்பூசி அட்டையை கட்டாயமாக்குவதற்கான சட்ட தயாரிப்பு பணிகள் இறுதிக்கட்டத்தில்! பூஸ்டர் தடுப்பூசியும் அவசியம்..

ஆசிரியர் - Editor I
தடுப்பூசி அட்டையை கட்டாயமாக்குவதற்கான சட்ட தயாரிப்பு பணிகள் இறுதிக்கட்டத்தில்! பூஸ்டர் தடுப்பூசியும் அவசியம்..

பொது இடங்களில் நடமாடுவதற்கு தடுப்பூசி அட்டையை கட்டாயமாக்குவதற்கான சட்ட தயாரிப்பு பணிகள் இறுதிக்கட்டத்தை அடைந்துள்ளதாகவும், 

அது தொடர்பாக உரிய தரப்புக்களுடன் கலந்துரையாடல் நடத்தப்படுவதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், வைத்திய கலாநிதி அசேல குணவர்த்தன கூறினார். 

தற்போதைய நிலையில், பூஸ்டர் தடுப்பூசியை அனைவரும் பெற்றுக் கொள்ள வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

இரண்டாவது தடுப்பூசியை செலுத்திய பின்னர், முதல் 3 மாதங்களில் மூன்றாவது தடுப்பூசியைப் பெற்றுக் கொள்ள வேண்டும்.

அந்த தடுப்பூசி செலுத்தல் மூலம் பல்வேறுப்பட்ட நோய் அறிகுறிகள் ஏற்படுவதாக வெளியான தகவல் இதுவரை விஞ்ஞான ரீதியாக உறுதிப்படுத்தப்படவில்லை 

எனவும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார்.