அரச ஊழியர்கள், அரச ஓய்வூதியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி! தனியார்துறையினருக்கு துன்பமான செய்தி..
நாட்டில் சகல அரச ஊழியர்களுக்கும் மாதாந்தம் 5 ஆயிரம் ரூபாய் மேலதிக கொடுப்பனவு வழங்க நேற்று நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் தீர்மானம் எடுக்கப்பட்டிருப்பதாக நிதியமைச்சர் பஸில் ராஜபக்ஸ கூறியுள்ளார்.
இது தொடர்பில் அமைச்சர் தொிவித்துள்ளதாவது,
அனைத்து அரச ஓய்வூதியர்களுக்கும் 5000 ரூபா கொடுப்பனவு வழங்கப்படும்.
மேலும், சமுர்த்தி பெறுவோருக்கு வழங்கப்படும் 3500 ரூபாய் கொடுப்பனவிற்கு மேலதிகமாக 1000 ரூபாவை வழங்கப்படும்.
ஊனமுற்றோருக்கான கொடுப்பனவு பெறும் இராணுவத்தினருக்கும் இந்த 5000 ரூபாய் கொடுப்பனவு வழங்கப்படும்.
அனைத்து அத்தியாவசிய பொருள்கள் மற்றும் மருந்து பொருள்கள் மீதான வரியை நீக்க முடிவு.
நெற்செய்கையாளர்களுக்கு உரத்தட்டுப்பாடு காரணமாக அறுவடை நஷ்டம் ஏற்படக் கூடும் என்பதால் எதிர்காலத்தில் ஒரு கிலோ நெல்லுக்கு 75 ரூபாயாக விலை நிர்ணயம் செய்ய ஜனாதிபதி பணிப்பு.
தனியார்துறை ஊழியர்களுக்கு மேலதிக கொடுப்பனவு வழங்குவது தொடர்பில் தொழில வழங்குனர்களுடன் பேசுமாறு தொழிற்றுறை அமைச்சருக்கு பணிப்பு.