SuperTopAds

பொது இடங்களுக்கு செல்ல தடுப்பூசி அட்டை கட்டாயம்! 2 வாரங்களில் நடைமுறைக்கு, சுகாதார அமைச்சு வெளியிட்ட அறிவிப்பு..

ஆசிரியர் - Editor I
பொது இடங்களுக்கு செல்ல தடுப்பூசி அட்டை கட்டாயம்! 2 வாரங்களில் நடைமுறைக்கு, சுகாதார அமைச்சு வெளியிட்ட அறிவிப்பு..

பொது இடங்களுக்கு செல்வோருக்கு தடுப்பூசி அட்டையை கட்டாயமாக்கும் நடைமுறை நேற்றய தினம் தொடக்கம் கட்டாயமாக்கப்பட்டுள்ளபோதும், நடைமுறைப்படுத்தப்படுவதற்கு 2 வாரங்கள் தேவை என சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல கூறியுள்ளார். 

அதற்காக செயலி ஒன்றையும் கியூ ஆர் கோட் (QR Code) ஒன்றை உருவாக்கும் பணிகள் தற்போது இடம்பெற்று வருவதாக அமைச்சர் குறிப்பிட்டார். எவ்வாறாயினும், இந்த செயன்முறைக்கு இரண்டு வார காலம் எடுக்கும் என அமைச்சர் தெரிவித்தார்.

இரண்டு தடுப்பூசிகளையும் பெற்றுக்கொள்ளாதவர்கள் பொது இடங்களுக்குப் பிரவேசிப்பது தொடர்பில், சட்ட கட்டமைப்பு ஒன்றின் அடிப்படையில் செயற்பட எதிர்பார்ப்பதாகவும் சுகாதார அமைச்சர் கெஹேலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.