SuperTopAds

காணாமல்போன சிறுவர்கள் தொடர்பில் பொதுமக்களின் உதவியை நாடியுள்ள பொலிஸார்!

ஆசிரியர் - Editor I
காணாமல்போன சிறுவர்கள் தொடர்பில் பொதுமக்களின் உதவியை நாடியுள்ள பொலிஸார்!

இரு சிறுவர்கள் காணாமல்போன சம்பவம் தொடர்பில் பொலிஸார் பொதுமக்களின் ஒத்துழைப்பினை நாடியிருக்கினறனர். 

கொடதெணியாக - வத்தேமுல்ல என்ற இடத்தில் 10வயது மற்றும் 12 வயதான உறவுமுறை சிறுவர்கள் இருவர் காணாமல்போயிருந்தனர். 

சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸாருக்கு இதுவரை எவ்வித தகவல்களையும் கண்டறிய முடியவில்லை.

அதன்படி, இந்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணை நடவடிக்கைகள் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் 

கொலை மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்ற விசாரணை பிரிவினால் மேற்கொள்ளப்படும் என பொலிஸார் அறிவித்துள்ளனர்.

அதன்படி, இந்த சிறுவர்கள் தொடர்பில் தகவல் அறிந்தால் மேலே குறிப்பிடப்பட்டுள்ள தொலைப்பேசி இலக்கங்களுக்கு அறிவிக்குமாறு 

பொலிஸார் பொதுமக்களுக்கு அறிவித்துள்ளனர்.