SuperTopAds

14 வயது சிறுமியை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய பெண் உட்பட இருவர் கைது! 2 வருடங்களாக தொழிலில் ஈடுபடுத்தியுள்ளாராம்..

ஆசிரியர் - Editor I
14 வயது சிறுமியை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய பெண் உட்பட இருவர் கைது! 2 வருடங்களாக தொழிலில் ஈடுபடுத்தியுள்ளாராம்..

14 வயதான சிறுமைிய நீண்ட நாட்களாக பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய சிறுமியின் உறவினரான பெண் உட்பட இருவர் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். 

32 வயதுடைய கிராண்ட்பாஸ் பிரதேசத்தைச் சேர்ந்த பெண்ணொருவரும், மருதானை பிரதேசத்தைச் சேர்ந்த 38 வயதுடைய ஆணொருவருமே கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவ்வாறு பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்பட்ட 14 வயது சிறுமி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த சிறுமியை அவரது உறவுமுறை பெண்ணொருவர் பலவந்தமாக அழைத்துச் சென்று பாலியல் தொழிலில் ஈடுபடுத்துவதாக 

இரகசிய தகவல் கிடைத்தமைக்கமைய முன்னெடுக்கப்பட்ட விசாரணையின்போதே மேற்குறிப்பிட்ட இரு சந்தேகநபர்களும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட பெண் கொழும்பு - கிராண்ட்பாஸ் பகுதியைச் சேர்ந்தவராவார். 

அவர் மருதானையில் உள்ள சிறுமியின் வீட்டுக்குச் சென்று அவரை பிரிதொரு தனிவீடு ஒன்றுக்கு அழைத்துச் சென்றமையும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

சில தினங்களுக்கு தனது வீட்டில் சிறுமியை தங்க வைத்துக் கொள்வதாக அவரது பெற்றோரிடம் தெரிவித்துள்ள குறித்த பெண், 

அந்த தினங்களில் சிறுமியை வெவ்வேறு இடங்களுக்குச் அழைத்துச் சென்று 50,000 ரூபாய் என்ற அடிப்படையில் வெவ்வேறு நபர்களுக்கு விற்பனை செய்துள்ளார்.

குறித்த சிறுமி 12 வயது முதல் கடந்த இரு ஆண்டுகளாக பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்பட்டமை விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் கூறினர்.  

சிறுமியை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய பெண், அதனால் கிடைக்கப் பெற்ற பணத்தில் சுகபோக வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கின்றார்.

பாதிக்கப்பட்ட சிறுமியிடம் பெற்றுக் கொண்ட வாக்குமூலத்திற்கமைய மேலும் சில சந்தேகநபர்களை கைது செய்வதற்கான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேல் மாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன், கொழும்பு மாவட்டத்திற்கு பொறுப்பான பிரதி பொலிஸ்மா அதிபர் சந்திரகுமார உள்ளிட்ட அதிகாரிகளின் ஆலோசனைகளுக்கமைய 

மருதானை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் தலைமையில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.