பாண் உள்ளிட்ட பேக்கரி உற்பத்தி பொருட்களின் கட்டுப்பாட்டு விலை நீக்கம்! விலை உச்சம் தொடும் அபாயம்..
பாண் உள்ளிட்ட சகல பேக்கரி உற்பத்திகளுக்குமான கட்டுப்பாட்டு விலை இன்று நள்ளிரவு தொடக்கம் நீக்கப்படுவதாக பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் கூறியுள்ளது.
விநியோகம் மற்றும் தமது தேவைக்கேற்ப விலைகளை நிர்ணயிக்க உரிமையாளர்களுக்கு முடியும் என பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவிக்கின்றது.