SuperTopAds

பேருந்து கட்டணம் உயர்கிறது..! தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் இன்று கூடுகிறது..

ஆசிரியர் - Editor I
பேருந்து கட்டணம் உயர்கிறது..! தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் இன்று கூடுகிறது..

நாட்டில் எரிபொருட்களின் விலைகளை அதிகரிக்க அரசாங்கம் தீர்மானம் எடுத்திருக்கும் நிலையில் பஸ் கட்டணத்தை அதிகரிக்கும் நிர்ப்பந்தம் தமக்கு ஏற்பட்டுள்ளதாக இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் கூறியுள்ளது.

அதன்படி குறைந்தபட்ச பஸ் கட்டணத்தை 5 ரூபாவாக அதிகரிக்க வேண்டியிருக்கும். எவ்வாறாயினும், பஸ் கட்டண திருத்தம் தொடர்பான தீர்மானத்தை எட்டுவதற்கு சங்கத்தின் உறுப்பினர்கள் இன்று பிற்பகல் கூடுவார்கள் என்றும்,

இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.அண்மையில் எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டபோது நாடு எதிர்கொண்ட நிலைமையினால் பஸ் கட்டணத்தை அதிகரிக்கவில்லை.

வாகன உதிரி பாகங்கள் மற்றும் பல சேவைகள் 300 சதவீதம் அதிகரித்துள்ளதால், தனியார் பஸ் உரிமையாளர்களால் இயக்க முடியாத நிலை உள்ளது.பஸ் கட்டணத்தை அதிகரிப்பது பொதுமக்களுக்கு மேலும் 

சுமையை ஏற்படுத்தும் என்பதால், அதற்கான தீர்வை வழங்குவது அரசாங்கத்தின் பொறுப்பாகும் என்றும் அவர் கூறினார்.