பூஸ்டர் தடுப்பூசி பெற்றதன் பின் 2 நாட்களுக்கு மேல் காய்ச்சல் நீடித்தால் மருத்துவரை நாடுங்கள்! மருத்துவர்கள் எச்சரிக்கை..
பூஸ்டர் தடுப்பூசி பெற்றுக் கொண்டவர்களுக்கு 2 நாட்களுக்கு மேலாக காய்ச்சல் நீடித்தால் உடனடியாக மருத்துவமனை செல்லவேண்டும். என மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இது தொடர்பில் விசேட மருத்துவ நிபுணர் மல்காந்தி கல்ஹேன தொிவிக்கையில், நாட்டில் கொரோனா தொற்றுக்கு மத்தியில் டெங்கு மற்றும் புதிய காய்ச்சல்களும் பரவும் அபாயம் காணப்படுகின்றது.
தங்களது குடும்ப உறுப்பினர்கள் எவருக்காவது பூஸ்டர் தடுப்பூசி செலுத்திய பின் 2 நாட்களுக்கு காய்ச்சல் காணப்படுமாக இருந்தால் அது தொடர்பில் அவதானத்துடன் செயற்பட்டு உடனடியாக மருத்துவ ஆலோசனை பெறவேண்டும் என்றார்.