பிறந்து 3 மாதங்களேயான குழந்தையை 7 லட்சத்திற்கு விற்று போதைப்பொருள் வாங்கிய தம்பதி! இலங்கையில் நடந்த கொடூர சம்பவம்..
பிறந்து 3 மாதங்களேயான குழந்தையை 7 லட்சம் ரூபாய்க்கு விற்று அந்த பணத்தில் போதைப் பொருள் வாங்கிய தம்பதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த சம்பவம் குருநாகலில் இடம்பெற்றிருக்கின்றது. சட்டத்தரணி ஒருவரிடம் கடிதமொன்றை பெற்றுக்கொண்டு அனுராதபுரத்தில் உள்ள தம்பதியினருக்கு விற்பனை செய்துள்ளனர்.
குறித்த சம்பவம் பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.போதைப்பொருளுடன் கைதுசெய்யப்பட்ட பெண்ணின் பையில் சிறிய குழந்தையொன்றின் ஆடை இந்துள்ளது.
அதனை தொடர்க்கு முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளிலேயே இந்த வியாபாரம் தொடர்பில் பொலிஸாருக்கு தெரியவந்துள்ளது.
குழந்தை விற்பனை செய்து கிடைத்த பணத்தில் 30,000 ரூபாவுக்கு பணத்தை வங்கியில் வைப்பிலிட்டுள்ளமை சந்தேகநபர்களிடம்
மேற்கொள்ளப்பட்ட ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.