நாட்டில் 80 வீதமான சிற்றுண்டிசாலைகள், உணவகங்கள் மூடப்படும் அபாயம்! ஒரு மரக்கறி உணவு பார்ஸல் விலை 180 ரூபாயாக உயர்வு..
நாட்டில் சமையல் எரிவாயு தட்டுப்பாடு மற்றும் மரக்கறி விலை அதிகரிப்பினால் சுமார் 80 வீதமான சிற்றுண்டிசாலைகள், உணவகங்கள் மூடப்படும் அபாயம் எழுந்துள்ளதாக சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்க தலைவர் அசேல சம்பத் கூறியிருக்கின்றார்.
மரக்கறி விலை அதிகரிப்புக்கு மேலதிகமாக சந்தையில் எரிவாயு தட்டுப்பாடு பிரதான பிரச்சினையாக மாறியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் தங்கள் சேவைகளை தொடர முடியாத நெருக்கடியான சூழ்நிலையை எதிர்கொண்டுள்ளனர்.
எரிவாயு தட்டுப்பாடு மற்றும் மரக்கறிகளின் விலை அதிகரிப்பால் மரக்கறி அடங்கிய மதிய உணவின் விலையானது 180 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் சங்கம் மேலும் தெரிவித்துள்ளது.