நாட்டில் ஒமிக்ரோன் தொற்றுக்குள்ளானோர் எண்ணிக்கை 4 ஆக உயர்ந்திருக்கின்றது!
நாட்டில் ஒமிக்ரோன் வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களுடைய எண்ணிக்கை 4 ஆக உயர்ந்திருப்பதாக ஸ்ரீ ஜயவர்த்தனபுர பல்கலைகழகத்தின் ஒவ்வாமை நோயெதிர்ப்பு மற்றும் உயிரணு உயிரியல் பிரிவின் பணிப்பாளர் கலாநிதி சந்திம ஜீவசுந்தர கூறியிருக்கின்றார்.
இன்று ஆய்வகத்தில் இருந்து நேர்மறை தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தனது ட்விட்டரில் தெரிவித்துள்ளார். இதற்கமைய எதிர்காலத்தில் ஒமிக்ரோன் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.