விபத்தை ஏற்படுத்தியதுடன், காயமடைந்தவரை காப்பாற்றுவதாக கூறி அழைத்து சென்று பாதி வழியில் 200 ரூபாய் கொடுத்து இறக்கிவிட்டவர் கைது!
விபத்தில் காயமடைந்த நபரை வைத்தியசாலையில் அனுமதிப்பதாக கூறி ஏற்றிச் சென்று பாதி வழியில் இறக்கிவிட்டுச் சென்ற சம்பவம் கொழும்பு - ஹாலிஎல பகுதியில் நேற்றய தினம் மாலை இடம்பெற்றுள்ளது.
காயமடைந்தவரை வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்வதாகக் கூறி விபத்தினை ஏற்படுத்திய வாகனத்தின் சாரதி அதே வாகனத்தில் ஏற்றிச் சென்றிருக்கின்றார்.
அவ்வாறு ஏற்றிச் சென்றவர் காயமடைந்த நபரிடம் 200 ரூபாவை கொடுத்துவிட்டு பாதி வழியில் இறக்கிவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக ஹாலிஎல பொலிஸார் தெரிவித்தனர்.
பாதிக்கப்பட்ட நபர் ஹாலிஎல பொலிஸில் முறைப்பாடு செய்ததையடுத்து விபத்தை ஏற்படுத்திய சாரதி கரந்தகொல்ல வீதித் தடுப்பில் வைத்து கைது செய்யப்பட்டார்.