பிறந்து 11 மாதங்களேயான பச்சிளம் குழந்தைக்கு எமனான வாழைப்பழம்!
பிறந்து 11 மாதங்களேயான குழந்தைக்கு ஊட்டப்பட்ட வாழைப்பழம் தொண்டடையில் சிக்கியதில் குழந்தை பரிதாபகரமாக உயிரிழந்துள்ளது.
வாழைப்பழம் தொண்டையில் சிக்கிய நிலையில் கொன்னகஹஹேன வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளது.
சம்பவம் தொடர்பாக பொலிஸார் மேலும் தொிவித்துள்ளதாவது, அஹங்கம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட, மெதகெட்டுவ பகுதியை சேர்ந்த 11 மாதங்களான,
சலன நிம்சரா எனும் குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மேலதிக விசாரணைகளுக்காக
குழந்தையின் சடலம் காலி கராபிட்டிய வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.