அரிசி உட்பட 50 வகையான அத்தியாவசிய பொருட்களின் விலைகள் குறைக்கப்பட்டது! பண்டிகை காலத்தை முன்னிட்டு..
பண்டிகை காலத்தை முன்னிட்டு அரிசி உட்பட 50 வயகையான அத்தியாவசிய பொருட்களுக்கான விலைகள் குறைக்கப்பட்டிருப்பதாக வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்த்தன கூறியிருக்கின்றார்.
இந்த விலைக்குறைப்பு நேற்றய தினம் தொடக்கம் அமுல்படுத்தப்பட்டிருக்கின்றது. இதன்படி பல வகையான அரிசிகள் 100 ரூபாவுக்கும் குறைவான விலையில் ´சதொச´ வில் பெற்றுக்கொள்ள முடியும்.
வருட இறுதிவரையில் இந்தச் சலுகை நடைமுறையிலிருக்கும் என்று வர்த்தக அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார். இதேவேளை ,50 வகையான அத்தியாவசியப் பொருட்களை,
சதொச மூலம் நேற்று முதல் குறைந்த விலையில் பெற்றுக் கொள்ள முடியும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.