நாட்டில் எந்தவேளையிலும் முடக்கம், அல்லது பயணத்தடை விதிக்கப்படலாம்! அரசு தீவிரமாக ஆராய்கிறது..

பண்டிகை காலத்தை மையப்படுத்தியதாக நாட்டை முடக்குவது குறித்து அரசாங்கம் ஆலோசனைகளை நடாத்திவருவதாக சுகாதார அமைச்சை மேற்கோள்காட்டி கொழும்பு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
இதன்படி சுகாதார அமைச்சின் உயர் அதிகாரிகளுடன் அரசாங்கம் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வருவதாக அறியமுடிகிறது. எவ்வாறாயினும், கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு காலப்பகுதியில்
நாட்டை முடக்காமல் பயணத்தடைகளை மாத்திரம் அமுல்படுத்தும் யோசனையை சுகாதார பிரிவு முன்வைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.