சுழற்சிமுறை மின்வெட்டு நாளையே நிறைவுக்கு வரும்..! இ.மி.சபை பொதுமுகாமையாளர் விடுத்த அறிவிப்பு..
நாடு முழுவதும் மின் விநியோகம் நாளை தொடக்கம் வழமைக்கு திரும்பும். என இ.மி.சபையின் பொது முகாமையாளர் எம்.ஆர்.ரணதுங்க கூறியுள்ளார்.
கடந்த வெள்ளிக்கிழமை பிரதான மின் கட்டமைப்பில் ஏற்பட்ட கோளாறு காரணமாக நாடு முழுவதும் மின்சார விநியோகம் தடைப்பட்டது.
சுமார் 6 மணித்தியாலங்களுக்க பின்னர் மின் விநியோகம் வழமைக்கு கொண்டுவரப்பட்டபோதும் அமைப்பில் ஏற்பட்ட சமநிலையின்மை காரணமாக
வெள்ளிக்கிழமை இரவுவரையில் நாட்டின் பல பகுதிகளுக்கு மின்சாரம் வழங்கப்படவில்லை. எனினும் சனிக்கிழமை மின்சாரம் வழமைக்கு திரும்பியது.
நுரைச்சோலை அனல் மின் நிலையத்தின் செயற்பாடகள் வழமைக்க திரும்பவரை நாட்டின் சில பகுதிகளில் ஒரு மணிநேர மின்வெட்டு
நடைமுறைப்படுத்தப்படலாம் என மின்சாரசபை அறிவித்தமை குறிப்பிடத்தக்கது.