எரிவாயு விநியோகம் தொடர்பாக விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு..! நாளை முதல் வழமைபோல்..
கொழும்பு துறைமுகத்திற்கு எரிவாயு எடுத்துவந்த சகல கப்பல்களிலும் எரிவாயுவின் தரம் தொடர்பான பரிசோதனைகளில் எந்தவொரு பிரச்சினையும் இல்லை. என்பதால் நாளை தொடக்கம் எரிவாயு விநியோகத்திற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது.
குறித்த பரிசோதனையின் நிர்ணயிக்கப்பட்ட அளவில் உள்ளடங்கங்கள் இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. அதனடிப்படையில் நாளை முதல் எரிவாயு விநியோகம் இடம்பெறும் என தெரிவிக்கப்படுகின்றது.