இலங்கையில் அடையாளம் காணப்பட்ட முதல் ஒமிக்ரோன் தொற்றாளர் குறித்து வெளியான தகவல்
இலங்கையில் SARS-CoV-2 வகைகளின் முழு மரபணு வரிசை முறையின் அறிக்கை இன்று ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் நோயெதிர்ப்பு மூலக்கூறு மற்றும் மூலக்கூறு மருத்துவத்துறையின் ஒவ்வாமை, நோயெதிர்ப்பு மற்றும் உயிரணு உயிரியல் பிரிவினால் வெளியிடப்பட்டுள்ளது.
பேராசிரியர் நீலிகா மாளவிகே மற்றும் கலாநிதி சந்திமா ஜீவந்தர உட்பட USJ ஆராய்ச்சியாளர்களால் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
கடந்த 2 வாரங்களில் இலங்கைக்கு வருகை தந்த பயணிகளில் PCR பரிசோதனைகளின் மூலம் தொற்று உறுதி செய்யப்பட்ட பயணிகளின் 94 மாதிரிகள் மற்றும் கொழும்பு, கம்பஹா, இரத்தினபுரி, களுத்துறை, கராப்பிட்டிய, திருகோணமலை மற்றும் வவுனியா மாவட்டங்களில் இருந்து வரிசைப்படுத்தப்பட்டிருந்தன.
இவ்வாறு வரிசைப்படுத்தப்பட்ட 94 மாதிரிகளில், நைஜீரிய பயணி ஒருவரிடமிருந்து Omicron ஒமிக்ரோன் தொற்று கண்டறியப்பட்டுள்ளதுடன்,இந்த மாதிரிகள் அனைத்தும் டெல்டா வகையைச் சேர்ந்தவை என்றும் தெரிவிக்கப்படுகின்றது.