திடீர் மின்வெட்டு அமுலானது ஏன்..? CID விசாரணைகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளது..!
நாடு முழுவதும் நேற்றய தினம் மின்வெட்டு அமுலான நிலையில் குறித்த சம்பவம் தொடர்பாக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டிருப்பதாக இ.மி.சபை கூறியுள்ளது.
நாடு முழுவதும் நேற்று பிற்பகல் மின் விநியோகத் தடை ஏற்பட்டிருந்தது. முதலில் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக இந்த மின்வெட்டு ஏற்பட்டதாக மின்சாரசபை கூறியுள்ளது.
எவ்வாறாயினும், பின்னர் இது தொழிற்சங்கங்களின் சதியாக இருக்கலாம் என்ற சந்தேகம் எழுவதாக இலங்கை மின்சார சபை தலைவர் தெரிவித்திருந்தார்.
இந்த சம்பவத்தின் உண்மைத் தன்மையை அறிந்துகொள்ளும் நோக்கில் தற்போது குற்றப் புலனாய்வு பிரிவினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.